FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

புற்றுநோயை எதிர்க்க உறுதிமொழி ஏற்பு

சென்னை, அக். 8: உலக புற்றுநோய் ஆதரவு சிகிச்சை தினத்தையொட்டி புற்றுநோயை எதிர்க்க பொது மக்கள் உறுதிமொழி ஏற்றனர். இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பலூன்கள்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

சென்னை, அக். 8: உலக புற்றுநோய் ஆதரவு சிகிச்சை தினத்தையொட்டி புற்றுநோயை எதிர்க்க பொது மக்கள் உறுதிமொழி ஏற்றனர். இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உள்பட 500 பேர் "புற்று நோயை எதிர்க்க கைகோர்ப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.

இது குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறியது: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடினமான காலங்களில் மருத்துவரீதியாகவும் சமூகரீதியாகவும் உறவினர்களும் மருத்துவர்களும் உதவி செய்வோம் என உறுதி ஏற்றுள்ளோம். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமைடைந்தவர்களை நேரில் அழைத்து புற்றுநோயாளிகளுக்கு நோயை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர் அஜீரணம், உணவு விழுங்குவதில் பிரச்னை, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியின்மை, ஆசனவாயில் ரத்தக் கசிவு, தொடர் இருமல், குரலில் மாற்றம், மருத்துவ சிகிச்சை எடுத்தும் கூட ஆறாத காயம் உள்ளிட்ட அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது. அவை, புற்றுநோய்க்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். இந்தியாவில் மூன்றில் இரண்டு சதவீதத்தினர் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அனுகுகின்றனர் என்றார் சந்திரமோகன்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பழனி, சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி. கனகசபை ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments