மருத்துவச் சேவைகள் தொடக்கம்
சென்னைமாநகராட்சி வளாகத்தில் மருத்துவச் சேவைகளை மேயர் சைதை சா.துரைசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னைமாநகராட்சி வளாகத்தில் மருத்துவச் சேவைகளை மேயர் சைதை சா.துரைசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
ஆயுர்வேதம், யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் நகர்ப்புற சமூக நல மையம், ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மாநகராட்சி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தியாகராய நகர், மீனாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இந்த மருத்துவச் சேவைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.