FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அக்.10-க்குள் கேரள திரைத்துறைக்கு தொழில் அந்தஸ்து!

கேரள திரைத்துறைக்கு விரைவில் தொழில்துறை அந்தஸ்து வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது...

7 வினாடிகள் முன்பு
கேரள சினிமா, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத் - கோப்புப் படம்
பகிர்:

கேரள திரைத்துறைக்கு வரும் அக்.10 ஆம் தேதிக்குள் தொழில்துறைக்கான அந்தஸ்து வழங்கப்படும் என கேரள சினிமா, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் 100 நாள் செயல் திட்டத்தின் காலக்கெடுவான அக்.10 ஆம் தேதிக்குள் கேரளத்தின் திரைப்படத் துறைக்கு “தொழில்” அந்தஸ்து வழங்கப்படும் என அமைச்சர் விஷ்ணுநாத் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டில் இதுவரை எந்தவொரு மாநிலத்திலும் திரைத்துறைக்குத் தொழில் அந்தஸ்து வழங்கப்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“எனக்குத் தெரிந்த வரை, நாட்டின் எந்தவொரு மாநிலமும் சினிமாவை தொழில்துறையாக மதிப்பது இல்லை. முதல்முறை கேரளம் சினிமாவை தொழில்துறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திரைத்துறை ஒரு முறையான தொழில் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதும் அதற்கு தேவையான நிர்வாக மாற்றங்கள் செய்ய வேண்டியது குறித்து பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், திரைத்துறையினருக்குத் தேவையான அனுமதிகளை வழங்குவது, அவர்களின் குறைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அரசு நடவடிக்கைகள் சிரமமின்றி மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Kerala's Minister P.C. Vishnunath, has announced that the Kerala film industry will be granted 'industry status' by October 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments