FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியது: தேடும் பணி தீவிரம்

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 11:42 pm IST
பகிர்:

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூருலிருந்து 4 கழுதைப் புலிகள் கொண்டுவரப்பட்டு அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கழுதைப் புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது. இன்று மாலை கூண்டிலிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு கழுதைப் புலி காணாதது கண்டு உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். 
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை நேரில் பார்வையிட்டனர்.
பின்  தப்பி ஓடிய கழுதைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அதனை சுற்றுயுள்ள பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது எனவே அதை கண்டறிவதற்காக நாளை செவ்வாய்கிழமை உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். எனவே நாளை காலை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments