FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் திருவொற்றியூர், அண்ணாநகர் உள்ளிட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் திருவொற்றியூர், அண்ணாநகர் உள்ளிட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்துக்கான திறந்த வெளிக் கூட்டம் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஆகிய மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments