FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வழிப்பறி: கல்லூரி மாணவர் கைது

சென்னை அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


சென்னை அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருநீர்மலை அருகே உள்ள ரங்கா நகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பா.சுந்தரம் (55). பி.எஸ்.என்.எல்.லில் பணிபுரிகிறார்.
சுப்பராயன் நகர் பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை காலை நின்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சுந்தரத்தின் செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தனர். பொதுமக்கள் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார். சங்கர் நகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர். போலீஸார் விசாரணையில் அவர், பல்லாவரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த ம.இர்பான் (21) என்பதும், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இர்பான் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments