FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரவாயல் உயர்நிலை மேம்பாலம்: விரைவில் புதிய வரைவு திட்ட அறிக்கை'

சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் இடையேயான உயர்நிலை மேம்பாலத் திட்டத்துக்கான புதிய வரைவு திட்ட அறிக்கை இம்மாத இறுதிக்குள் 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் இடையேயான உயர்நிலை மேம்பாலத் திட்டத்துக்கான புதிய வரைவு திட்ட அறிக்கை இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.
சென்னைத் துறைமுக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியது:
துறைமுகத்தின் வளர்ச்சிக்குப் பெருமளவு உதவிகரமாக இருக்கும் மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டம் கடந்த 2012 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. பல்வேறு காரணங்களால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 
இந்த நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதை அடுத்து சீரமைக்கப்பட்ட புதிய வழித் தடத்தில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. 
இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் பாலப் பணிகள் தொடங்கும். 
கடந்த நிதியாண்டில் 51.88 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ள சென்னைத் துறைமுகம் சுமார் ரூ.953 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை சுமார் 18 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் 10 ஆண்டுகளுக்கு கார்களை சென்னை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ரவீந்திரன்.
நிகழ்ச்சியில் துறைமுகத்தின் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், செயலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments