FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முஸ்லிம்களுக்குத் தனித்த தலைமை ஏன் இல்லை? ஓவைசி

உத்தரப் பிரதேச தேர்தலில் ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளியுங்கள் என ஓவைசி அழைப்பு விடுத்துள்ளது பற்றி..

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி - DPS
பகிர்:

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு ஆதரவளித்து அதை வலுப்படுத்துமாறு அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற 'மிலாதுன் நபி' பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

நாடாளுமன்ற உறுப்பினரான ஓவைசி, மற்ற அனைத்து சமூகங்களுக்கும் தனித்த தலைமை இருக்கும்போது, நாட்டின் முஸ்லிம்களுக்கு ஏன் அத்தனைய தலைமை இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

கடந்த பிகார் பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் ஐந்து இடங்களைக் கைப்பற்றியதைக் குறிப்பிட்ட ஓவைசி, உத்தரப் பிரதேசத்திலும் இக்கட்சி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனது நண்பர்களும், பெரியோர்களும் ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளித்து அதை வலுப்படுத்துங்கள். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பிகாரில் வென்றது போல உத்தரப் பிரதேசத்திலும், ஏஐஎம்ஐஎம் உறுப்பினர்களுக்கு அல்லாஹ் வெற்றியை அருளுவான்.

குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்புபவர்கள் தாராளமாக முன்வைக்கட்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்த தலைமை இருக்க முடியும் என்றால், நாட்டின் முஸ்லிம்களுக்கு ஏன் இருக்கக்கூடாது?

இந்தியா வலுவடையும்; இந்தியாவின் ஜனநாயகமும் அரசியலமைப்பும் வலுப்படுத்தப்படும்.

18 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்திற்கு நாட்டில் வெறும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை.

அவர்களால் 'வந்தே மாதரம்' விவகாரம் குறித்துப் பேச முடிவதில்லை, நாடாளுமன்றத்தில் தேசியப் பாடல் குறித்த விவாதம் நடைபெற்றபோது, ​​அதுகுறித்துத் தான் மட்டுமே பேசியதாகவும் குறிப்பிட்டார்.

பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்துக் கருத்து தெரிவித்த ஒவைசி, அந்தத் தீர்ப்பைத் தான் எதிர்ப்பதாகவும், அதை ஏற்கவில்லை. அந்தத் தீர்ப்பு தவறானது; அது இஸ்லாத்தின் மீதான தாக்குதலாகும் என்று அவர் கூறினார்.

AIMIM president Asaduddin Owaisi has called upon people to support and strengthen the party and pray for the success of its candidates in the 2027 Uttar Pradesh assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments