கேரளத்துக்கு 12 டன் நிவாரண பொருள்கள் ரயில்கள் மூலம் அனுப்பும் பணி தீவிரம்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை 12 டன் நிவாரண பொருள்களை பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு குழு சேகரித்துள்ளது. இந்த நிவாரண பொருள்களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை 12 டன் நிவாரண பொருள்களை பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு குழு சேகரித்துள்ளது. இந்த நிவாரண பொருள்களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெற்கு ரயில்வே சார்பில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-ஆவது நடைமேடையில் கடந்த 17-ஆம் தேதியில் இருந்து நிவாரண பொருள்கள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. திங்கள்கிழமை வரை மொத்தம் 12 டன் நிவாரண பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கான ஆடைகள், போர்வைகள், பாய், உணவு பொருள்கள், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஒரு டன் நிவாரண பொருள்கள் கடந்த 18-ஆம் தேதி மங்களூரு மெயில் ரயில் மூலமாக கள்ளிக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புறப்பட்ட ரயிலில் 2 டன் நிவாரண பொருள்கள் கேரள மாநிலம், செங்கன்னூருக்கு அனுப்பப்பட்டன. சென்னை-மங்களூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலில் 2 டன் நிவாரண பொருள்கள் பாலக்காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதேபோல, திங்கள்கிழமையும் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எழும்பூரில் இருந்து ரயிலில் மங்களூருக்கு ஒரு டன் படுக்கை விரிப்பு மற்றும் உடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை-ஆலப்புழாவுக்கு புறப்பட்ட ரயிலில் 4 டன் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ரயில்கள் மூலம் நிவாரண பொருள்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.