அண்ணா நூற்றாண்டு நூலகம்: பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் நாளை சிறப்புரை
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள "பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள "பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்களுக்காக வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொன் மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பிரபல இலக்கிய ஆளுமைகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்றி வருகின்றனர்.
இந்த வாரத்துக்கான பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்று, "அரங்கேறும் சொற்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி "யு டியூப்', "முகநூல்' ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது; 'Anna Centenary
Library' என்ற தேடலில் நேரலை ஒளிபரப்பை காணலாம். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என்றும் நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.