ஆர்.நல்லகண்ணுவிடம் ஸ்டாலின் ஆசி
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிடம் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் வியாழக்கிழமை ஆசி பெற்றனர்.
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிடம் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் வியாழக்கிழமை ஆசி பெற்றனர்.
திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை அவருடைய இல்லத்தில் இருவரும் புதன்கிழமை சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணுவை அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை இருவரும் சந்தித்து ஆசி பெற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.