சென்னைப் பல்கலை. எம்.எல். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு) முதுநிலை சட்டப் படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனி படிப்பு) முதுநிலை சட்டப் படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ன்ய்ர்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 10 -ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோன்று தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், வரும் டிசம்பர் மாதத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க அக்டோபர் 25 -ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.