FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கவில்லை: கருவூலத் துறையினர் புகார்

புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய நிதியானது மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

சென்னை: புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய நிதியானது மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
தமிழ்நாடு கருவூலம்-கணக்குத் துறையில்  அனைத்துப் பணிகளையும் கணினிமயமாக்கி மனிதவளத்தை மேம்படுத்தும் திட்டம் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்த பல்வேறு அறிமுகக் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியன நடத்தப்படுவதாகவும், அவற்றை நடத்த போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கமானது, கருவூலம் - கணக்குத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த நிதி - மனிதவள மேம்பாட்டு திட்ட அறிமுக விழா மற்றும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இதற்கான செலவினப் பட்டியல்கள் அனைத்தும் காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அறிய வருகிறோம்.  நிதித் துறையின்கீழ் உள்ள கருவூலத் துறையில் ஒருங்கிணைந்த நிதி-மனித வள மேம்பாட்டுத் திட்டமானது ரூ.291கோடி செலவில் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
 புதிய திட்டத்துக்கான அறிமுக கூட்டமும், பயிற்சி வகுப்புகளும் மாவட்ட, வட்ட அளவில்  தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட கருவூல மாவட்ட நிர்வாகங்கள், சார் கருவூலங்களிலும், ஓய்வூதிய பிரிவுகளிலும், தனி நபர்களையும் குறிப்பிட்ட தொகையினை அளிக்க வேண்டும் என நிர்பந்தித்து பெற்று வருகின்றன. 
முறையாக நிதி ஒதுக்காமல், மாவட்டங்களுக்கு நிதிகளை பகிர்ந்து அளிக்காமல் செலவுகளைச் செய்வது மறைமுக வசூலுக்கு வழி வகுக்கும். அதன்மூலம் கருவூலத் துறைக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போதிய நிதிகளை ஒதுக்கி புதிய திட்டத்தை திறம்படச் செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments