FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நகை திருட்டு: கார் ஓட்டுநர் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் வீட்டில் நகை திருடியதாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜூன் 2018, 4:19 am IST
பகிர்:

சென்னை நந்தம்பாக்கத்தில் வீட்டில் நகை திருடியதாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கம் மனோரஞ்சிதம் தெருவைச் சேர்ந்த ரா.வீரப்பன் (62), தனியார் நிறுவன மேலாளர். கடந்த மாதம் 25-ஆம் தேதி வீரப்பன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். திருமணம் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைத் திருடப்பட்டது தெரியவந்தது.
நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் போரூர் காரம்பாக்கம் பிராமணர் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ப.பிரபு (27) நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிரபுவை கைது செய்து திருடப்பட்ட நகையை மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments