ஏரி, குளங்கள் பராமரிப்பு குறித்து இன்று சிறப்புக் கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 104 ஏரி, குளங்களை வணிக, பொது நிறுவனங்களின் பங்களிப்புடன் புனரமைக்கும் புதிய திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 104 ஏரி, குளங்களை வணிக, பொது நிறுவனங்களின் பங்களிப்புடன் புனரமைக்கும் புதிய திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலக செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு நிதிகளிலிருந்து ரூ. 5.95 கோடி மதிப்பில் 6 குளங்களும், ஏரிகளும் புனரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, 2 குளங்களை ரூ. 20.29 கோடி மதிப்பிலும், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 38 குளம், ஏரிகளை ரூ. 40.07 கோடி மதிப்பில் புனரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 24 குளம், ஏரிகளைப் புனரமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
வணிக, பொது நிறுவனங்களின் பங்களிப்புடன்: சென்னையில் உள்ள 104 ஏரி, குளங்களைப் புனரமைக்க சமூக அக்கறை உள்ள வணிக, பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.