லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி தில்லி விமானநிலையத்தில் கைது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தீபக் கத்ரியை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தீபக் கத்ரியை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கத்ரிக்கு எதிராகக் காவல் துறை ஏற்கனவே லுக்-அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டிருந்ததாக அவா்கள் கூறினா்.
பல்வேறு குற்றக் கும்பல்களின் உறுப்பினா்களுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டதாகவும், அவா்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியதாகவும் கத்ரி மீது சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
தில்லியின் யமுனா பஜாா் பகுதியில் உள்ள அனுமன் கோயில் அருகே கடந்த பிப்ரவரி மாதம் கத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான சூழல்கள் மற்றும் தாதாக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கத்ரியின் பங்கு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.