FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக கழிப்பறை தின விழிப்புணர்வு முகாம்

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி உலகக் கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
2030-ஆம் ஆண்டுக்குள் மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறையை ஏற்படுத்தி, திறந்தவெளி கழிப்பிடமில்லாத உலகை உருவாக்குவதே  இதன் நோக்கமாகும்.
இதையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "உலகக் கழிப்பறை தினம்' மற்றும் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.இம் முகாமில், 1600 மாணவிகள், 63 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதினால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், கழிப்பிடத்தை உபயோகிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து தூய்மை இந்தியா, டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழியை மாணவிகள் எடுத்தனர்.
இம் முகாமில்  பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய மேற்பார்வை பொறியாளர் எம்.முருகன், சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் எஸ்.குமார், பள்ளித்  தலைமையாசிரியை ஏ.ஜெ.எழிலரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments