FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புயல் பாதிப்பு: மின் கட்டணத்தை ரத்து செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை

புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஜி.கே.வாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறுதல் கூறினார். 
இந்நிலையில் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தமாகா சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இந்தத் தொகை அரசிடம் வழங்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரும் கவலையில் மூழ்கியுள்ள மக்களுக்கு இது மேலும் சுமையாக இருக்கும். அதனால், புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களுக்கு இந்த மாத மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரைஅந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். மதுக்கடைகள் திறந்தால் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும்.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரமும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரமும், சாய்ந்து போன வாழைக்கு ஓர்  ஏக்கருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 ஆயிரமும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சமும் நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments