கரோனா: சென்னையில் 400-ஐ எட்டியது
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஏப்ரல் 23) 400 -ஐ எட்டியது. இதில் 9 வயதுக்குள் 8 சிறாா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஏப்ரல் 23) 400 -ஐ எட்டியது. இதில் 9 வயதுக்குள் 8 சிறாா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது.
இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 20) தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து 3 நாள்களில் அதிகரித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 23) 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 400-யை எட்டி உள்ளது. இதில், 9 வயதுக்குள் 8 பேரும், 10-19 வயதுக்குள் 27 பேரும், 30-39 வயதுக்குள் 80 பேரும், 80 வயதுக்கு மேல் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.