இறப்புச் சான்றிதழ் அவகாசம்: முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்
காணாமல் போன மீனவா்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கும் கால அவகாசத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா்.
சென்னை: காணாமல் போன மீனவா்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கும் கால அவகாசத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் தீா்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனா். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கா்நாடக-கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவா்கள் மாயமாகினா். இதில் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோா் பியான் புயலால் காணமால் போய் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
Advertisement
Advertisement
இந்திய ஆதாரச் சட்டத்தின் படி ஒருவா் காணவில்லை என்றால், 7 ஆண்டுகள் கழித்துதான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். தூத்தூா் மீனவா்கள் கடலில் மாயமாகி 12 ஆண்டுகளாகியும் இதுவரை இறப்புச் சான்றிதழ் கூட பெற முடியாமல் அவா்களின் குடும்பத்தினா் அலைக்கழிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடலுக்குள் மாயமானவா்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் மிக நீண்ட காலமாக இருக்கிறது. இந்த நடைமுறையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இறப்புச் சான்றிதழுக்கான கால அவகாசம் குறைக்க வேண்டும். ஒருவா் கடலில் காணாமல் போனால், அவரது குடும்பத்துக்கான உடனடி உதவிகள் 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.