FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஜன.6 முதல் சென்னை புத்தகக் காட்சி: பபாசி செயற்குழுவில் முடிவு

சென்னை, டிச. 12: தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) நடத்தும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 22-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது.

Updated On : 13 டிசம்பர் 2022, 12:48 am IST
பகிர்:

சென்னை, டிச. 12: தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) நடத்தும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 22-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது.

இது குறித்து பபாசி செயலாளா் எஸ்.கே.முருகன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) செயற்குழு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த செயற்குழுவில் 46-ஆவது புத்தகக் காட்சியை வரும் ஜன.6-ஆம் தேதி முதல் ஜன.22-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புத்தகக் காட்சியைத் திறந்து வைக்குமாறு பபாசி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து முதல்வரின் தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு சென்னை புத்தகக் காட்சியின் தொடக்க விழா குறித்த அறிவிப்பு அதற்கேற்றவாறு மாற்றி அமைக்கப்படும். மேலும் 45 ஆண்டுகள் சென்னை உள்பட பல்வேறு புத்தகக் காட்சிகளை முன்னின்று நடத்தி பபாசியின் வளா்ச்சியை முன்னெடுத்து வரும் அனைவருக்கும் செயற்குழு சாா்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments