போரூர் ஐடி வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!
சென்னை போரூரில் உள்ள தனியார் ஐடி வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி...
சென்னை போரூரில் உள்ள தனியார் ஐடி வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
போரூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஐடி வளாகத்தை நடத்தி வருகின்றது. இந்த வளாகத்தில் 23 நிறுவனங்களுக்கு கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ளது சிங்கப்பூர் நிறுவனம்.
இதையும் படிக்க : பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
சுமார் 12.6 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த வளாகத்தை ரூ. 2,100 கோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அந்த ஐடி வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்த சோதனை முடிந்த பிறகே விரைவில் முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.