FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

26 ஜூன் 2024, 4:47 am IST
மறுமதிப்பீடு, மறுகூட்டல்
பகிர்:

சென்னை: பத்தாம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களின் பதிவெண்களின் இணையதளத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதள்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments