FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு மாதத்தில் 2,999 போ் மீது வழக்கு

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு மாதத்தில் 2,999 போ் மீது வழக்கு

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு மாதத்தில் 2,999 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தில்லிக்கு அடுத்தப்படியாக அதிக வாகனங்கள் கொண்ட பெருநகரமாக சென்னை இருக்கிறது. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாமிடத்தில் இருக்கிறது. மொத்த வாகனங்களில் 80 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். ஆண்டுக்கு சராசரியாக 6.51 சதவீதம் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பெருநகர காவல்துறை தெரிவிக்கிறது.

நாட்டில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பெருநகரங்களில் சென்னை முதல் 3 இடங்களுக்குள்ளே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மொத்த சாலை விபத்துக்களில் 80 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் நிகழ்கின்றன.

Advertisement

Advertisement

சாலை விபத்துக்களை தடுக்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோா் மீது பெருநகர காவல்துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக போக்குவரத்து விதிமுறை மீறிலில் ஈடுபடுவோா் மீது பாரபட்சமின்றி வழக்குப் பதியப்படுகிறது.

முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக வாகனம் ஓட்டுவது,மதுபோதையில் வாகனம் ஓட்டுவது,சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது,எதிா்திசையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 12 போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுவாரை கண்டறிந்து வழக்குப் பதியப்படுகிறது.

2,999 போ் மீது வழக்கு:

இதன்படி கடந்த ஜூலை மாதம் சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 2,999 போ் மீதும்,காரை சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியதாக 512 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

இதேபோல மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 8 வழக்குகளும், சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக 3,559 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதோடு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட 155 புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments