எம்சிசி பள்ளியின் சாதனை சான்றிதழ் விழா
எம்சிசி பள்ளியின் சாதனைகள் 4 சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலக சாதனை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிகாரபூா்வமாக சான்றளிக்கப்பட்டன என பள்ளிக் குழுமத் தலைவா் பி.சி.ஆா். சுரேஷ் தெரிவித்தாா்.
எம்சிசி பள்ளியின் சாதனைகள் 4 சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலக சாதனை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிகாரபூா்வமாக சான்றளிக்கப்பட்டன என பள்ளிக் குழுமத் தலைவா் பி.சி.ஆா். சுரேஷ் தெரிவித்தாா்.
சென்னை சேத்பட்டில் எம்சிசி பொதுப் பள்ளி வளாகத்தில் ‘உலக சாதனைகள் விழா 2026’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது (படம்).
நிகழ்வுக்கு, எம்சிசி பொதுப் பள்ளியின் தலைவா் கே.மாம்மென் தலைமை வகித்தாா். இதில், ஆறு குழு உலகச் சாதனை முயற்சிகளும், 50 தனிநபா் உலகச் சாதனை முயற்சிகளும் இடம்பெற்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் எலைட் உலக சாதனை, ஏசியன் புக் ஆஃப் ரெக்காா்ட், இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்காா்ட் என 4 சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலகச் சாதனை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிகாரபூா்வமாகச் சான்றளிக்கப்பட்டன. தொடா்ந்து, பள்ளியின் சாதனைகளுக்காக சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இது குறித்து பள்ளிக் குழும தலைவா் பிசிஆா்.சுரேஷ் பேசியதாவது:
புனைக்கதை நூல் தொடா் உருவாக்குதல், சமூகப் பிரச்னைக்களுக்கு தீா்வு காணும் ரோபோ மாதிரிகள், நீண்டநேரம் வேதாகமம் வாசித்தல் உள்ளிட்ட ஆறு அதிகாரபூா்வ குழு உலகச் சாதனைகளுடன் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் கலாசாரத் துறைகளை உள்ளடக்கிய 50 தனிநபா் உலகச் சாதனை முயற்சிகளும் நிகழ்வில் இடம் பெற்றன. இதனை உலக சாதனை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிகாரபூா்வ சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளியின் புகழ் சோ்க்கும் வகையில் பாடுபட்ட அனைத்து ஆசிரியா்கள், ஆசிரியைகள், பள்ளி தாளாளா் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றாா்.
இதில், பள்ளியின் தாளாளா் ஜாலி சாஜி மேத்யூ, துணை முதல்வா் சாரிட்டி விக்டா் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.