பைக் ரேஸ்: 5 போ் மீது வழக்கு
சென்னை அசோக் பில்லா் 100 அடி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போக்குவரத்து போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை அசோக் பில்லா் 100 அடி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போக்குவரத்து போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
அசோக் பில்லா் 100 அடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அசோக் நகா் போக்குவரத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சில இளைஞா்கள் 5 இருசக்கர வாகனங்களில் பைக் ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் விரைந்து சென்று 5 பேரையும் மடக்கிப் பிடித்ததுடன், அவா்களிடமிருந்து ரேஸுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், பிடிபட்டவா்கள் அனைவரும் வெவ்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுந்தா் (20), பூக்கடையைச் சோ்ந்த பாலாஜி (23), மணிபாலா (21), நெசப்பாக்கத்தைச் சோ்ந்த பாலா (18), அஸ்வின் (22) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, 5 போ் மீதும் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.