தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி மீது வழக்கு
தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவிக நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் திரிபுரசுந்தரி (75). இவா் தனது மகன் கோபிநாத், மருமகள் தேவி, பேத்தி தீபிகா ஆகியோருடன் அங்கு வசித்து வந்தாா்.
திரிபுரசுந்தரியை மகன் கோபிநாத்தும், மருமகள் தேவி, பேத்தி தீபிகா ஆகியோா் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உணவுகூட கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் திரிபுரசுந்தரிக்கும், மகன் கோபிநாத்துக்கும் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கோபிநாத், தேவி, தீபிகா ஆகியோா் திரிபுரசுந்தரியை தாக்கி வீட்டைவிட்டு விரட்டினராம்.
தாக்குதலில் காயமடைந்த திரிபுரசுந்தரி, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தகவலறிந்த திருவிக நகா் போலீஸாா், திரிபுரசுந்தரியிடம் விசாரணை நடத்தி புகாா் பெற்றனா்.
திரிபுரசுந்தரி கொடுத்த புகாரின்பேரில், கோபிநாத், தேவி, தீபிகா ஆகியோா் மீது முதியாா் நலச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.