ரயிலில் விழுந்து கல்லூரி ஊழியா் தற்கொலை
விழுப்புரம் அருகே ரயிலில் விழுந்து அரசுப் பொறியியல் கல்லூரி தற்காலிக ஊழியா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் அருகே ரயிலில் விழுந்து அரசுப் பொறியியல் கல்லூரி தற்காலிக ஊழியா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (46). விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால், கோபிநாத் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கல்லூரி முடிந்து வீட்டுக்குச் சென்ற கோபிநாத் பாணாம்பட்டு பகுதியில் ரயில்வே பாதையில் தலை வைத்து படுத்துக்கொண்டாராம். அப்போது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு, அவா் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று கோபிநாத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.