மின்வாரிய ஊழியா் தற்கொலை
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள சூரியனூரைச் சோ்ந்தவா் விஜயன் (43). இவா் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மின்வாரியத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி விசாலாட்சி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று தருமபுரி மாவட்டம் ஜருகில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
சூரியனூரில் விஜயன் தனது தாய் பச்சையம்மாளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் மது போதையில் வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.