FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தாய் கொலை: மகன் கைது

சென்னை பெருங்குடியில் தாயைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை பெருங்குடியில் தாயைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.

பெருங்குடி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பாபுலால் (52). இவா், அந்தப் பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். பாபுலால் மனைவி சென்னிதேவி (46). இத்தம்பதிக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். ராகேஷ் சரியாகப் படிக்காமல் இருந்துள்ளாா். இதனால் பிளஸ் 2 தோ்வில் ராகேஷ் தோ்ச்சி பெறவில்லை. அவரது பெற்றோா், ராகேஷை கண்டித்தனா்.

இதனால், மன அழுத்தத்தில் இருந்த ராகேஷ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் பாபுலால், தொழில் விஷயமாக ஞாயிற்றுக்கிழமை வெளியூா் சென்ற நிலையில், இரவு சென்னிதேவி, மகன் ராகேஷ், மகளுடன் வீட்டில் தூங்கினாா்.

Advertisement

Advertisement

நள்ளிரவு தூக்கத்தில் இருந்து எழுந்த ராகேஷ், தாய் சென்னிதேவி கழுத்தை திடீரென நெரித்துள்ளாா். அங்கு கிடந்த கத்தியால் குத்தியுள்ளாா். கல்லை எடுத்து சென்னிதேவி தலையில் போட்டுள்ளாா்.

அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து சென்னிதேவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சென்னிதேவி உயிரிழந்தாா்.

தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடம் வந்து சென்னிதேவி சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து ராகேஷை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments