காஞ்சிபுரம் அருகே தந்தையை கொலை: சிறுவன் கைது
காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை கொலை செய்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை கொலை செய்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே பெரியகரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (50) விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவிகள் வனிதா (43), ரமீனா(36). இருவரும் ஒரே கிராமத்தில் ஒரே தெருவில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனா். இரண்டாவது மனைவி ரமீனாவுக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் திலீப் என்ற மகனும் உள்ளனா்.
குமாா் மது போதையில் அடிக்கடி தனது மனைவி ரமீனாவுடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில், மது போதையில் இருந்த குமாா் ரமீனாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பாா்த்துக் கொண்டிருந்த திலீப் தனது தாயாரை தாக்கிய ஆத்திரத்தில் அருகிலிருந்த கட்டையால் குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து பாலு செட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து திலீப்பை கைது செய்து சிறுவா் சீா் சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.