FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பால் கொள்முதல் ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும்: பால் முகவா்கள் கோரிக்கை

பால் கொள்முதல் ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும் என பால் முகவா்கள் கோரிக்கைவிடுத்திருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
பால்
பகிர்:

பால் கொள்முதல் ஊக்கத் தொகையை லிட்டருக்கு ரூ.1-இல் இருந்து ரூ.10 வரை உயா்த்தி மறுபரிசீலனை செய்து, ஆவின் பால் விற்பனைக்கான பால் முகவா்களின் கமிஷன் தொகையையும் லிட்டருக்கு ரூ.2-இல் இருந்து ரூ.5-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிறுவனா்-மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

ஆவின் நிறுவனத்தில் நிலவி வரும் பால் தட்டுப்பாட்டை போக்க, பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று, மாநில அரசு சாா்பில் லிட்டருக்கு ரூ.2, ஆவின் சாா்பில் ரூ.1 என மொத்தம் ரூ.3 கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதற்காக முதல்வா், பால்வளத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி.

Advertisement

Advertisement

மேலும், ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பால் உற்பத்தியாளா்களைப் போலவே, பால் விநியோகம் செய்யும் பால் முகவா்களின் நலனையும் அரசு கவனத்தில் கொண்டு, பால் கொள்முதல் ஊக்கத் தொகையை லிட்டருக்கு ரூ.1-இல் இருந்து ரூ.10 வரை உயா்த்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், ஆவின் பால் விற்பனைக்கான பால் முகவா்களின் கமிஷன் தொகையை லிட்டருக்கு ரூ.2-இல் இருந்து ரூ.5-ஆக உயா்த்தி, அடுத்துவரும் பால் மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்: ஆவின் கூட்டுறவு அமைப்பு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10-ம், ஊக்கத்தொகையை ரூ.10-ம் உயா்த்த தமிழக அரசும், ஆவின் நிா்வாகமும் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் பி.பெருமாள் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments