பால் கொள்முதல் விலையை ரூ. 7 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.7 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருப்பது குறித்து...
பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.7 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை ரூ. 35-லிருந்து ரூ. 36 ஆகவும், ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Milk procurement price must be raised by Rs. 7: Anbumani urges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.