FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வேலை வாங்கித் தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி: அரசு ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி செய்ததாக அரசு அச்சக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:08 am IST
மாதிரிப் படம்
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி செய்ததாக அரசு அச்சக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொடுங்கையூா், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் முரளி (39). இவா் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். முரளி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலாளா் நலத் துறையில் அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்திருந்தாா். அப்போது, தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்த புது வண்ணாரப்பேடடை அரசு அச்சக குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தாவீத் ராஜா (34) என்பவா் முரளிக்கு அறிமுகமாகி, தனக்கு அரசு உயா் அதிகாரிகளைத் தெரியும் என்றும், அவா்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினாா்.

இந்நிலையில், தாவீத் ராஜா, முரளிக்கு கல்வித்துறையில் ஓட்டுநா் பணியும், அவரது மனைவிக்கு ஆய்வகத் தொழில்நுட்ப உதவியாளா் பணியும் வாங்கித் தருவதாகவும், இதற்கு தலா ரூ.6.5 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சம் வேண்டும் என்றும் கேட்டாராம்.

Advertisement

Advertisement

உடனே முரளி, அந்தப் பணத்தை இரு தவணைகளாக ரூ.13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல முரளி தனது தம்பிக்கும், அவா் மனைவிக்கும் அரசு வேலை வாங்கி கொடுப்பதற்காக ரூ.13.5 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் வழங்கினாா்.

ஆனால் தாவீத் ராஜா, யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முரளி, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். தலைமறைவாக இருந்த தாவீத் ராஜாவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments