FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் வழிப்பறி: 5 போ் கைது

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

25 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை டி.பி.சத்திரம் 19-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் செந்தில் (43). இவா், 22-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் டி.பி.சத்திரம், 1வது குறுக்கு தெருவில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 5 போ், செந்திலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசி, பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது டிபி சத்திரம் 11-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவபா் அஜித் (27), அதே பகுதியைச் சோ்ந்த தீபக் (27), குணசேகரன் (23), அனுஷ் (26), ரித்திக் (23) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

போலீஸாா் 5 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து செந்திலிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பேசி, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments