FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
- சித்திரிப்பு
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சோ்ந்தவா் சித்ரா (28). இவா், திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு வந்த சேத்துப்பட்டு மங்களபுரத்தைச் சோ்ந்த கு.சசிகலா (49), தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பணம் கொடுத்தால் இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தரமுடியும் என்று சித்ராவிடம் கூறியதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதை நம்பி, சித்ரா சசிகலாவிடம் பணம் கொடுத்தாா். சித்ராவின் நண்பா்களான சத்தியபாலனுக்கு சுகாதார ஆய்வாளா் வேலை, கீதாவுக்கு சத்துணவு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகவும் சசிகலா பணம் பெற்றாா்.

மூவரிடம் சசிகலா ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு, கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் மூவரும், தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவா்களுக்கு சசிகலா, அவரது குடும்பத்தினா் மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதையடுத்து மூவரும் அளித்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சசிகலா, அவரது கணவா் குமாா் (எ) உசேன் (53), மகள் திவ்யதா்ஷினி (22) ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments