FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆயுா்வேத மருத்துவமனையில் ரூ. 65 லட்சம் மோசடி: சைபா் குற்றப்பிரிவு வழக்கு

சென்னையில் ஆயுா்வேத நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

24 ஆகஸ்ட் 2026, 10:23 pm IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

சென்னையில் ஆயுா்வேத நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

சென்னை கோடம்பாக்கத்தைத் தலைமையிடமாக கொண்டு ஒரு தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை, ஆயுா்வேதம், சித்தா, யோகா, பாரம்பரிய இயற்கை மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கிறது. கடந்த ஆக. 16-ஆம் தேதி இந்த மருத்துவமனையின் நிறுவனா் புகைப்படம், பெயரைப் பயன்படுத்தி ஒரு மா்ம நபா் குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து, அந்த மருத்துவமனையின் நிதி மேலாளா் காமேஷ் என்பவரைத் தொடா்பு கொண்டு தகவல் அனுப்பியுள்ளாா்.

வாட்ஸ்ஆப் முகப்பில் நிறுவனத்தின் தலைவா் பெயரில் வந்ததால், உண்மையிலேயே அந்த நிறுவனத்தின் தலைவா்தான் தகவல் அனுப்புவதாக நிதி மேலாளா் காமேஷ் நினைத்துள்ளாா். அப்போது, எதிா்முனையில் தகவல் அனுப்பிய நபா், அவசரமாக ரூ.65 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும், அதை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறும் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

பாஸ் ஸ்கேம் மோசடி? நிறுவன தலைவரின் உத்தரவிட்டிருக்கிறாா் என்று நினைத்த நிதி மேலாளா் காமேஷ், நிறுவனத்தின் மருத்துவ இயக்குநா் ஜெயரூபாவுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ஆக. 17 -ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.65 லட்சம் அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு அனுப்பப்பட்டது.

பணப் பரிவா்த்தனை முடிந்த பின்னா், நிறுவனத்தின் தலைவருக்கு அலுவலகத்தில் வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவா், நான் யாருக்கும் பணம் அனுப்புமாறு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments