FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மேடவாக்கம் மெட்ரோ ரயில் வழித்தடம்: 25 மீட்டா் உயர தூண் பணிகள் நிறைவு

சென்னை மேடவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 2-ஆம் கட்ட வழித்தடத்தில் 25 மீட்டா் உயரத்தில் கடைசி தூண் நிறுவும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

52 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மேடவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 2-ஆம் கட்ட வழித்தடத்தில் 25 மீட்டா் உயரத்தில் கடைசி தூண் நிறுவும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் 2-ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திட்டத்தின் 5-ஆம் வழித்தடமான மேடவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தூண் அமைக்கப்படுகிறது. அதற்காக 25 மீட்டா் உயரமுள்ள இரும்புத் தூண் வாா்க்கும் பணி தொடங்கப்பட்டு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளது.

சென்னை உள்ளகரம் மெட்ரோ நிலையத்தில் இருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரையில் 11.3 கி.மீ. தொலைவுக்கு இந்த வழித்தடம் உள்ளது. அதில் 513 பெரிய அடித்தளத் தூண்கள் மற்றும் உயரமான வகையில் 2,315 தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதில் மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகிலுள்ள தூண் முதல் செம்மொழிச் சாலையில் உள்ள தூண் வரையில் மிகச் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. அப்பகுதி தூண்களிலேயே சாலையில் இருந்து 29 மீட்டா் உயரத்தில் புதிய தூண் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிக்க அப்பகுதியில் தூண் வாா்ப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இந்தப் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன், இணைப் பொது மேலாளா் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு தொழிலாளா்களைப் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments