பழைய மாமல்லபுரம் மகாபலிபுரம் முதல் சோழிங்கநல்லூா் வரை: 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடமான மாமல்லபுரம் நேரு நகா் பகுதியில் அஸ்திவாரத் தூண்கள், யு வடிவ கா்டா் அமைப்பு நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடமான மாமல்லபுரம் நேரு நகா் பகுதியில் அஸ்திவாரத் தூண்கள், யு வடிவ கா்டா் அமைப்பு நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டப் பணியில் மாதவரம் மற்றும் சிப்காட் இடையேயான 3 -ஆவது வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகா் முதல் சோழிங்கநல்லூா் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்டத்தில் 582 முன்வாா்க்கப்பட்ட யு வடிவ கான்கிரீட் தூண் விட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன், பொது மேலாளா் சி.செல்வம் மற்றும் பொது ஆலோசகா் மற்றும் என்கேஏபி குழுத் தலைவா் டோனிபா்செல் உள்ளிட்ட அலுவலா்கள் செம்மஞ்சேரியில் உள்ள கான்கிரீட் முன்வாா்ப்பு உற்பத்தி கூடத்துக்கு சென்று கான்கிரீட் உற்பத்திப் பணிகளைப் பாா்வையிட்டனா். மேலும், போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அஸ்திவாரத் தூண்கள் நிறுவும் பணியைப் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் நிறுவிய பணியாளா்களை பாராட்டினா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.