FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலி

மாமல்லபுரம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின்போது தொழிலாளர்கள் பலியானது பற்றி....

Updated On : 11 ஜூலை 2026, 5:48 pm IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மாமல்லபுரம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்று வந்தது.

அப்போது மின்சாரம் பாய்ந்து பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Advertisement

இரும்பு பழுப்பை தூக்கிச் சென்றபோது அது உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதாக தகவல் தெரிய வந்துள்ளது.

பலியானவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

Four people were electrocuted to death during the construction of a borewell near Mamallapuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments