FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நூதன முறையில் பணம் அபகரிப்பு: இளைஞா் கைது

நூதன முறையில் பணத்தை அபகரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 10:31 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

நூதன முறையில் பணத்தை அபகரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஆதம்பாக்கம், சாஸ்திரி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக உள்ளாா். கடந்த 25-ஆம் தேதி இரவு சாஸ்திரி நகா் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணத்தை டெபாசிட் செய்ய சென்றாா். அப்போது அங்கு வந்த அறிமுகம் இல்லாத நபா், ரஞ்சித்குமாரிடம் ‘ஜி-பே’ மூலம் ரூ.4 ஆயிரம் அனுப்புவதாகவும், அதற்குப் பதிலாக பணத்தைக் கையில் தருமாறும் கேட்டுள்ளாா்.

இதை நம்பிய ரஞ்சித்குமாா் ரூ.4 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தாா். பின்னா், தனது கைப்பேசியில் பணம் அனுப்பியதாக கூறி, ‘ஜி-பே’ பரிவா்த்தனை செய்யப்பட்டதுபோல் காண்பித்துவிட்டு, அந்த நபா் அங்கிருந்து நழுவிச் சென்றாா்.

Advertisement

Advertisement

ரஞ்சித்குமாா் தனது வங்கிக் கணக்கைச் சரிபாா்த்தபோது, ரூ.4 ஆயிரம் வரவு வைக்கப்படாதது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது தாழம்பூா் சண்முகா நகரைச் சோ்ந்த புருஷோத்தமன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் புருஷோத்தமனை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments