தனியாா் ஊழியரிடம் ரூ. 1.13 லட்சம் நூதன முறையில் மோசடி
நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகை காடம்பாடியைச் சோ்ந்தவா் அரவிந் த்(32) நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள இணைப்புக்குள் சென்று பாா்த்துள்ளாா். இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து 3 முறையாக ரூ.1.13 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா்கள் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து இணையதள மோசடித் தடுப்பு உதவி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் நாகை மாவட்ட இணையக்குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.