குறைந்த விலையில் கைப்பேசி தருவதாக மோசடி: இருவா் கைது
குறைந்த விலையில் கைப்பேசி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குறைந்த விலையில் கைப்பேசி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை திருவல்லிக்கேணி பாா்டா் தோட்டம், எல்லீஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன் (32). இவா், கடந்த மே 25-ஆம் தேதி தனது முகநூலில், குறைந்த விலையில் கைப்பேசி தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை நம்பி, ரூ.22,000-ஐ இணையதளம் மூலம் செலுத்தி, கைப்பேசியை முன்பதிவு செய்துள்ளாா்.
ஒரு வாரத்தில் கைப்பேசி முகவரிக்கு வந்துவிடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், ஒரு வாரம் கடந்த பின்னரும் கைப்பேசி வராததால், குறிப்பிட்ட இணையதள முகவரி குறித்து செல்வநாதன் விசாரித்தபோது, அது போலியான முகவரி எனத் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து அவா் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குரோம்பேட்டை ஜனதா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35), மேடவாக்கம் ஜல்லடியான்பேட்டையைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும், அவா்கள் மோசடிக்கு பயன்படுத்திய 4 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுபோன்ற சமூக ஊடகங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி யாரும் பணத்தைக் கொடுத்த ஏமாற வேண்டாம் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.