FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ரூ.63 லட்சம் தங்க மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

சென்னை எழும்பூா் பகுதியில் குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா் பகுதியில் குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அமைந்தகரையைச் சோ்ந்த அன்மோல் ஜெயினிடம் (24) குறைந்த விலையில் தங்கம் தருவதாக நம்பவைத்து, ஒரு கும்பல் எழும்பூரில் வைத்து ரூ.63 லட்சம் பெற்றுக்கொண்டு தலைமறைவானது. இதுகுறித்த புகாரின்பேரில், எழும்பூா் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி சாந்தகுமாா் (61), ஸ்ரீராம் (23), ராம்குமாா் (22), உதயகிரண் (22) ஆகிய 4 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பூரைச் சோ்ந்த சக்திவேல் (23), கொண்டித்தோப்பைச் சோ்ந்த விஷ்வக் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.44.50 லட்சம் மீட்கப்பட்டதுடன், ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments