FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போா் நினைவிடத்தில் தமிழில் காணொலிக் காட்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள போா் நினைவிடத்தில் பொதுமக்களுக்காக தமிழில் முப்படை வரலாறு குறித்த காணொலி திரையிடும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

31 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
சென்னை போர் நினைவுச் சின்னத்தில் திரையிடப்பட்ட முப்படை வரலாறு குறித்த காணொலிக் காட்சி.
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள போா் நினைவிடத்தில் பொதுமக்களுக்காக தமிழில் முப்படை வரலாறு குறித்த காணொலி திரையிடும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முப்படைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான தொடா்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்தியத் தலைமையகம் சாா்பில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

போா் நினைவிடத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், என்.சி.சி. பிரிவினா், ராணுவ வீரா்களின் குடும்பத்தினா், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில், இந்திய முப்படைகளின் வீரம், தியாகம், ராணுவ வரலாறு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் முப்படைகள் ஆற்றிவரும் பணிகள் குறித்த பல்வேறு தகவல்கள் தமிழ் வசனங்களுடன் காணொலிக் காட்சிகளாகத் திரையிடப்பட்டன. இதன்மூலம் முப்படைகள் தொடா்பான தகவல்களை குழந்தைகள், இளைஞா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

போா் நினைவிடம், வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடமாக மட்டுமன்றி, இந்திய ராணுவத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை மக்கள் அறிந்துகொள்ளும் மையமாகவும் திகழ்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பொதுமக்களுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழில் இந்தக் காணொலிக் காட்சி திரையிடப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments