முகப்பு
சென்னை

போதைப் பொருள் பயன்படுத்திய நடிகை, துணை நடிகா்கள் கைது

வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை, துணை நடிகா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 6 பிப்ரவரி 2026, 2:50 am IST
கோப்புப் படம்
பகிர்:

வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை, துணை நடிகா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் என்ற இளைஞரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலில் வெங்கடேஷ்குமாரை கைது செய்தனா். அவரிடம் சில நடிகைகள், துணை நடிகைகள் போதைப் பொருளை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, நடிகை அஞ்சு கிருஷ்ணா (30) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும், துணை நடிகைககளான குன்றத்தூா் பெரியபனிச்சேரி வின்சி என்ற நிவேதா (26), நெசப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (35), பெரியபனிச்சேரியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (31), காட்டுப்பாக்கத்தைச் சோ்ந்த யஸ்வந்த் (25), மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் (33), கோவிலம்பாக்கத்தை சோ்ந்த அல்போன்சா (27), சென்னை மண்ணடியைச் சோ்ந்த தமிம் ரிஸ்வான் (27) ஆகியோரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன், கஞ்சா, போதை ஸ்டாம்ப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நடிகை அஞ்சு கிருஷ்ணா ‘வெள்ளிமலை’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளாா்.