கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: 2 போ் கைது!
ஆம்பூா் அருகே கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் எழில்தாசன் மற்றும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அய்யனூா் கிராமத்தில் பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்த ராஜா (60) தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
ஆம்பூா் - நாயக்கனேரி சாலை, வனத்துறை சோதனைச் சாவடி அருகே மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையின்போது அழகேசன் (39) என்பவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.