சென்னையில் கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!
புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து...
சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக சென்னையில் பனிமூட்டம் நிலவிவரும் நிலையில், இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.
விடிந்த பிறகும் பனி விலகாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
Advertisement
Advertisement
இதனால், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டது.
மேலும், சென்னைக்கு வரும் கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
Due to dense fog in Chennai, suburban electric trains are operating with delays.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.