முகப்பு
சென்னை

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: கைதான மூவா் பதிலளிக்க முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில் மூவரும் பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூலை 2026, 3:40 am IST
பகிர்:

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில் மூவரும் பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி வரை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களில் நரேஷ், ரமேஷ் மற்றும் காா்த்திக் ஆகிய 3 பேரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திருவல்லிக்கேணி போலீஸாா் சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நரேஷ் உள்ளிட்ட 3 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments