FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி

வளா்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நிலத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 10 ஜூலை 2026, 4:43 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

வளா்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நிலத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் 1 கி.மீ. தொலைவுக்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சுமாா் ரூ.72,000 கோடி அளவுக்கு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதாகவும், அந்தத் தடையை அரசு நீக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தொடா்பானவற்றை பொருளாதார அளவுகோல் கொண்டு அளவிட முடியாது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது இப்போதுள்ள வெறும் 1,725 ஏக்கா் சாா்ந்த ஒன்றல்ல. ஒட்டுமொத்த சென்னையையும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் இயற்கை அரணாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏற்கெனவே ஆக்கிரமிக்கபட்டுள்ளன. தற்போது எஞ்சியிருக்கும் பகுதிகளை பாதுகாப்பது மட்டுமன்றி, ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்டெடுக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments